Monday, 12 November 2012

என் மாயவரமும்.. கும்பகோணமும்..


பிறப்பென்றும்..  வளர்ப்பென்றும் ..
படிப்பென்றும்.. நண்பர் படையென்றும்..
அனைத்தையும் மலிவாய் 
கொடுத்திட்ட.. பூர்வீக பூமி..
கை விரித்தன்று கூறியது..இங்கு
உனக்கு வேலை இல்லை என்று..
கடல் கடந்து செல்ல
மனமில்லை ஆயினும் ..
மாநகர் தேடி விரைந்தோம்
நல்ல வேலைக்காக..
நேர்காணல்களின் நிறைவாய்
வேலை கிடைத்தது..
புதிய முகங்களின் சாயல்கள்
கண்ணில் பதியத் தொடங்கியது..
மாத இறுதியில் வங்கி
கணக்கில்  விடாபிடியாய்
நுழைந்து தன்னை
இணைத்துக் கொண்டது
உழைப்பின் ஊதியம்..

இதமாய்  சென்று கொண்டிருக்கிறது
இந்நாட்கள் என்று  நான்
என்னையே ஏமாற்றி கொண்டிருந்த
தினத்தில்  ஓர் நாள்
எழுதிய கோப்புகள்
கோர்வையாய்  இருக்க..
எழுதாத கோப்புகள்..
என்னவாயிற்று என
எழுப்பியது கேள்வி..பாதியிலயே
முகத்தில் தோன்றிவிட்ட
களைப்பினை கண்டும்..
கனவினில் மிதந்த 
கண்களை கண்டும்..
காரணம் ஓரிரு நாட்களில்
உலா வரப்  போகும்
ஒருசேர அமைந்திட்ட
இரண்டு விடுமுறை நாட்கள்
அது தீபாவளியோ..
இல்லை.. தமிழர் திருநாளோ..
விழா  நாள் என்பதையும் தாண்டி
நன்றியை  மட்டுமே
வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டது
அவ்விரு  நாட்களும் ..

எனக்காக ஒரு உதவி.. என்று
அலைபேசியில் ஐந்துக்கும்
மேற்பட்டவர்களிடம்..
தொடர்பு கொண்டேன்
ஊருக்கு செல்ல வேண்டி
அதிவேக இரயிலுக்கு..
ஒரே ஒரு முன்பதிவு சீட்டைப்  பெற்றிட
தட்கலுக்கும் தாக்கல் செய்து
பெற்று விட்டேன் பயணசீட்டை..
இதோ வந்து விட்டது
விடுமுறை என ஆர்ப்பரிதாலும்
இடையில் ஒரு நாள்..
கடந்து செல்ல..ஒரு புதிய 
கப்பலை விலைக்கு 
வாங்க வேண்டியிருந்தது
ஆழ்மனதிற்குள் பெய்த
அடை  மழையால்..
இரத்த ஓட்டமும்  மாறியது
பங்குச்ச்சந்தையாய்..

ஒரு வழியாய்
முடிந்தது வேலை
சக ஊழியர்களுக்கு..
திருநாள் வாழ்த்தை கூட
சொல்ல மறந்த அவசரம் கூட
அலுவலகத்தில் இருந்து
அறையை அடைந்த போதுதான்
 உணர முடிந்தது..
மடித்த ஆடைகள்
மெல்ல மெல்ல என
சினுங்கியதைக் கண்டு
சிரித்துக்கொண்டே
பெட்டியை கட்டி
அடைந்தேன் ரயில்நிலையம்..
பிடித்தேன்  இரயிலை
நொடிபொழுதில்..

சுகமாய் அமர்ந்த  மாத்திரத்தில்
அதற்கு இணையாய் வீசிய
காற்றுடன்  கதை பேசிக் கொண்டு
ஜன்னலோரத்தில் விறுவிறுப்பாய்..
நடந்த உரையாடலில்
விழியை கீறி  விட்டு
மறைந்தது ஒரு சிறு துகள் ..
வலியால் கண்களை மூடிய
வினாடியில் தான்   பிறந்தது
என்னிடம்  நானே எழுப்பிக் கொண்ட
முதல் கேள்வி ..
ஆமாம் .. ஏன் இந்த அவசரம்.
 படபடப்பு..   பளீர்  மகிழ்ச்சி..
கண்களில் இருந்து
விரலை நீக்கிய பின்பே
தொடங்கினேன் சிந்திக்க..
சாய்ந்தேன்.. சரிந்தேன்
யாரும் பேசாமலிருக்க..
தனியாய் தலையை கூட ஆட்டினேன்...
விடைதெரியாத பொழுதும் கூட
சாப்பிட மறக்கவில்லை
அதையும்  முடித்துவிட்டு
அடுத்ததாய் இடைமறித்த
தேநீரையும் அருந்தி விட்டு..
விம்மி விம்மி மனத்திற்குள்
விழுந்த யோசனைகள் கூட
எடுபடாமல் போக
விட்டில் பூச்சி போல 
கும்பகோணத்தில்..
விட்டு விட்டு மின்னிய 
கோபுர விளக்கையும்..
விடுதலை  விடுதலை ..என
மாயவரத்தில் உழவில் நின்ற
ஏர்பூட்டிய மாட்டின்
மணி ஓசையையும்
மனதில் நிறுத்தி நான்..
சுவாசித்த மறு நிமிடம்
கிடைத்தது ..விடை .


இருங்க மாயவரம் வந்துட்டு .. இறங்கி சொல்றேன் ..

 அது  ஒண்ணுமில்ல பாஸ்.. புள்ளைக்கு திடீர்னு  ஊர் ஞாபகமும்  .. அம்மா செஞ்ச அதிரசம் முறுக்கு ஞாபகமும் வந்துட்டு .. அதான் இவ்ளோ அலம்பல்.. புலம்பல்..  நீங்க  உங்க வேலைய  பாருங்க..  ஓகே..  மம்மி...  டாடி  .. ஜிம்மி ... ஸ்க்கூலு... 



Its DEDICATED TO MY ICICI & WELTH MAX FRIENDS....HAPPY DIWALI.
.