நீ நிற்பதாய்
தோன்றியே..
தினம் தினம்
சீன் போடுகிறேன் ...
- எங்கேயும் எப்போதும்..
நான் சிரிப்பதா
இல்லை அழுவதா..
நீயே சொல்..
தினமும் இரவில்.. நீ
உன் காதலை சொல்லும் போது ..
- - முப்பொழுதும் உன் கற்பனைகள்
நீ வருவாய் என
எண்ணிய விழிகள்..
நீயோ வராத பொழுதிலும்
கூட நீ நேற்று நின்ற
இடத்தயே வட்டமிடுகிறதே..
எனது கண்களுக்கும்
தேனை நுகரும் தேனீக்களுக்கும்
என்ன தொடர்பு...
- உன்னை கண் தேடுதே..
சுதந்திரமாய் திரிந்த
அவளது விரல்கள்..
ஜடை பின்னுகிறது
என்னை கண்டவுடன்
இது என்ன வெட்கமா..
இல்லை டூ விடுகிறாளா..
- டூ
தங்கமும் பிளாட்டினமும்
தாறுமாறாய் ஏறி கொண்டிருக்க
நீ மட்டும் தரையில்
மிக தைரியமாய்
நடமாடி கொண்டிருக்கிறாய்..
காவலுக்கு வரட்டுமா.. காதலுடன்
- காவலன்